அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடா? பொது மக்களுக்கு வர்த்தக அமைச்சரின் அறிவுறுத்தல்
தற்போதைய சூழ்நிலையில், நாட்டில் அத்தியாவசிய நுகர்வு பொருட்களுக்குத் தட்டுப் பாடு இல்லை என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன வலியுறுத்தியுள்ளார்.
எனவே, பொது மக்கள் தேவையில்லாமல் உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் சில பகுதிகளுக்கு முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முழுமையான ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படலாம் என்கிற அச்சநிலை பொது மக்களிடையே ஏற்பட்டுள்ளமையினால் பொருட்கள் கொள்வனவில் ஈடுபடும் மக்களினால் கொரோனா பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது.