உலக அரங்கில் சீனாவுக்கு வெற்றி . காட்சிப்படுத்தப்படும் விளம்பரப் பதாதைகள்.
சீனாவின் வுஹான் நகரில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கு வுகான் நகர கட்டடங்களில், பாலங்களில் உள்ள டிஜிற்றல் விளம்பர பதாதைகளில் சீன மொழியில் “வுஹானுக்கு வெற்றி” மற்றும் “சீனாவிற்கு வெற்றி” என்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகின்றது. குறிப்பாக இத்தாலி ஈரான் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்துவருகின்றது. ஆனால் தற்போது சீனாவில் கெரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.