பெண்கள் உலக கோப்பை இறுதி போட்டி: மனைவி ஆட்டத்தை நேரில் காண ஆஸ்திரேலியா பறக்கிறார் ஸ்டார்க்
தென்ஆப்பிரிக்காவில் உள்ள மிட்செல் ஸ்டார்க் பெண்களுக்கான உலக கோப்பை இறுதி போட்டியில் மனைவியின் ஆட்டத்தை காண்பதற்காக ஆஸ்திரேலியா விரைகிறார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை 2-1 எனக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது. 3-வது ஆட்டம் நாளை நடக்கிறது.
இதற்கிடையே ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பெண்கள் டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.