• TAMIL
  • SRI LANKA NEWS
  • TOP NEWS
  • LATEST NEWS
News

சம்பவத்தை கண்டிக்கிறேன்.! அமைச்சர் மன்னிப்பு கோரினார்.! கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலங்கையில் நடந்தது என்ன ??

இலங்கை இராணுவத்தினரின் செயற்பாட்டிற்கு ஸ்ரீலங்கா விளையாட்டுத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

5 வருடங்களின் பின்னர் ஹம்பாந்தோட்டையில் இலங்கை – மேற்கிந்திய அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது ரசிகர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டனர்.

இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பில் தான் கிரிக்கெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அலஹபெரும தெரிவித்துள்ளார்.

5 வருடங்களின் பின்னர் ஹம்பாந்தோட்டையில் பகல் இரவு போட்டியாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதனை பார்வையிடுவதற்கு சென்ற ரசிகர்கள் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டமைக்கு தான் கண்டனம் வெளியிடுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.