அரிசி சாதத்தால் கிராமங்களில் நீரிழிவு நோய் அதிகரிப்பு
சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய் ஒரு காலத்தில் வசதியானவர்களுக்கு மட்டுமே வரும் நோய் என்றே அறியப்பட்டிருந்தது.
14 ஆண்டுகளுக்கு முன்பு 4.9 சதவீதமாக மட்டுமே இருந்த நீரிழிவு நோய் இப்போது 13.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. அரிசி சாதத்தை அதிக அளவில் சாப்பிடுவதே நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் வசிக்கும் உடல் உழைப்பு இல்லாதவர்களை மட்டுமே அதிகம் பாதித்து வந்த இந்த நோய் இப்போது கிராமப்புற மக்களையும் பதம் பார்த்து வருகிறது. 50 வயதை தாண்டியவர்களை மட்டுமே நீரிழிவு நோய் தாக்கும் என்கிற நிலை மாறி இளம் வயதினரையும் இந்த நோய் அதிக பாதிப்புக்குள்ளாக்கி இருக்கிறது.
